டாடா யோதா பிக்அப் வரிசையானது, இந்த வகையில் குறைவான பராமரிப்பு செலவைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சப் பராமரிப்பு தேவைப்படும் டிரைவ்லைனுடன், இது அதிகபட்சச் சேமிப்பு மற்றும் அதிகச் செயல்பாட்டு நேரத்தை வழங்குகிறது.
20,000 kms எஞ்சின் ஆயில் மாற்ற இடைவெளி, 80,000 kms கியர் பாக்ஸ் மற்றும் ரியர் டிஃப்ஃபெரென்ஷியல் ஆயில் இடைவெளியுடன், ஒரு LFL (வாழ்நாள் முழுவதிற்கும் உய்வூட்டப்பட்ட) புரொப்பல்லர் ஷாஃப்ட், மற்றும் ஹப் மற்றும் சஸ்பென்ஷனுக்குக் கிரீஸ் தேவைப்படாத அம்சம் என்பதன் பொருள், பராமரிப்பு தேவையில்லை மற்றும் உங்களுக்கு மிகப்பெரிய சேமிப்பு என்பதாகும். கூடுதலாக, ஒரு பிரத்தியேகமான டாடா யோதா முன்னுரிமை சேவை ஹெல்ப்லைன் எண் 1800 209 7979 உடனான, எங்கள் 90-நிமிட/120- நிமிட எக்ஸ்பிரஸ் சர்வீஸ் வாக்குறுதியானது, விரைவில் சாலைக்குத் திரும்ப உங்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் மிகவும் எரிபொருள் திறன் மிகுந்த எஞ்சின்களில் ஒன்றாக, இந்த வரிசையானது காலியான பயணங்களின் போது எரிபொருளைச் சேமிப்பதற்காக உதவும் ஸ்மார்ட் எக்கோ-மோட் ஸ்விட்ச் மற்றும் ஓட்டுநரை எச்சரிக்கும் கியர்-ஷிஃப்ட் அட்வைசருடன் வருகிறது, மேலும் அதிகபட்ச மைலேஜை உறுதி செய்கிறது. இவை அனைத்தும் மற்றும் பலவற்றின் மூலம், நீங்கள் ஒவ்வொரு பயணத்திலும் அதிகம் சேமிக்கிறீர்கள்.